Main Menu

தென் ஆபிரிக்காவில் 500,000 பேருக்கு கொரோனா தொற்று

தென்னாபிரிக்காவில் இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் சனிக்கிழமையன்று புதிதாக 10,107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மொத்த எண்ணிக்கையை 503,290 ஆகவும், இறப்பு எண்ணிக்கையை 8,153 ஆக கொண்டுவந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ஸ்வெலினி ம்கைஸ் தெரிவித்துள்ளார்.

கொரோன தொற்றின் அதிக பாதிப்பு காரணமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடு கடுமையான முடக்க கட்டுப்பாடுகளை விதித்த நிலையில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது.

ஆனால் தற்போது பல தொற்று நோயாளிகள் தலைநகரான பிரிட்டோரியாவைச் சுற்றி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சுகாதார அதிகாரிகள் தொற்றுநோய்களின் வீதம் வேகமாக அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர்.

பகிரவும்...