Main Menu

போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக துருக்கி குற்றச்சாட்டு!

வடக்கு சிரியாவில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்தம் மீறப்பட்டுள்ளதாக துருக்கி குற்றம் சுமத்தியுள்ளது.

துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சகத்தினால் நேற்று(சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வடக்கு சிரியாவில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவுடன் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை துருக்கி இராணுவம் முழுமையாகக் கடைப்பிடித்து வருகிறது.

எனினும், ‘பயங்கரவாதிகள்’ (குர்திஷ் படையினர்) கடந்த 36 மணி நேரத்தில் 14 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவற்றில் 12 தாக்குதல்கள் வடகிழக்கு சிரியாவிலுள்ள ரஸ் அல்-அய்ன் நகரிலும், ஒரு தாக்குதல் தல் அப்யாத் நகரிலும் நடத்தப்பட்டன. மற்றொரு தாக்குதல் தல் தாமர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் தாக்குதல்களில் ஏவுகணைகள் உள்ளிட்ட இலகு ரக மற்றும் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள குர்திஷ் படையினர், துருக்கி இராணுவமே தற்காலிக பேர் நிறுத்தத்தினை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது.

பகிரவும்...