Main Menu

போப் ஆண்டவருக்கு உடல்நலக்குறைவு: தொடர்ந்து மூன்றாவது நாளாக மக்கள் சந்திப்பு இரத்து!

போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்து மூன்றாவது நாளாக மக்கள் சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.

83 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ், லேசான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வத்திகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ புரூய்னி தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பான கூடுதல் தகவல்களை அவர் வெளியிடவில்லை.

அதே நேரத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் தான் வசித்து வருகிற வத்திகன் விருந்தினர் மாளிகை சாண்டா மார்த்தாவில் வழக்கமாக நடைபெறுகிற காலை நேர பிரார்த்தனை கூட்டங்களை நடத்தியதாகவும் கூறப்படுகின்றது.

7 ஆண்டுகளாக போப் ஆண்டவராக இருந்துவரும் பிரான்சிஸ், தொடர்ந்து 3 நாட்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...