Main Menu

எல் கிளாஸிக்கோ: பார்சிலோனாவை பந்தாயடியது ரியல் மட்ரிட் அணி

லா லிகா கால்பந்து தொடரின் பார்சிலோனா மற்றும் ரியல் மட்ரிட் அணிகள் மோதிக் கொண்ட எல் கிளாஸிக்கோ போட்டியில், ரியல் மட்ரிட் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

சாண்டியாகோ பெர்னாபூ  விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரண்டு அணிகளும் முட்டி மோதிக் கொண்டன.

இரு அணிகளினதும் ஆக்ரோஷமான ஆட்டத்தால், முற்பாதியில் இரண்டு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முற்பாதி கோல் எதுவும் இன்றி நிறைவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும், இரண்டு அணிகளும் கோல் புகுத்துவதற்கு போராடின.

எனினும், நீண்டதொரு மற்றும் கடுமையான போராட்டத்திற்கு பிறகு முதல் கோல் போடும் வாய்ப்பு ரியல் மட்ரிட் அணிக்கு கிடைத்தது.

அணியின் இளம் வீரரான வினிஸியஸ் ஜூனியர் 71ஆவது நிமிடத்தில் அணிக்காக முதல் கோலை புகுத்தி, அரங்கில் குழுமியிருந்தா இரசிகர்களை கொண்டாட வைத்தார்.

இதனையடுத்து பதில் கோல் போடுவதற்கு பார்சிலோனா அணி, கடும் முயற்சி செய்தது. எனினும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

போட்டியின் 92ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடிக்கும் அதிஷடமும் ரியல் மட்ரிட் அணிக்கு கிட்டியது. இந்த கோலை மரியானோ அடித்து அசத்தினார்.

தொடர்ந்து போராடிய பார்சிலோனா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டியின் இறுதியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் ரியல் மட்ரிட் அணி வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ரியல் மட்ரிட் அணி புள்ளிபட்டியலில், 56 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது. தோல்வியடைந்த பார்சிலோனா அணி 55 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதுவரை நடைபெற்றுள்ள கிளாஸிக்கோ போட்டியில், இரு அணிளும் 244 முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 96 முறை வெற்றிபெற்றுள்ளன. 56 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.

பகிரவும்...