Main Menu

பேரம்­பேசும் பலத்தை இழந்­த­மையால் பௌத்த மய­மாக்கல் அரங்கேற்றம் – யாழ். கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

ஈழத்­த­மி­ழர்­க­ளா­கிய நாம் எமக்குள் பல்­வேறு கட்­சி­க­ளாக பிள­வு­பட்டு எமது பேரம் பேசும் பலத்தை இழந்­து­விட்ட நிலை­மையை இலங்கையில் காலத்­திற்கு காலம் ஆட்­சிக்கு வரும் தலை­வர்கள் தமக்கு சாத­க­மாக கையாண்டு வடக்கு–கிழக்கில் சிங்­கள குடி­யேற்­றங்­க­ளையும் பௌத்த மய­மாக்­கல்­க­ளையும் அரங்­கேற்றி வரு­கின்­றனர் என்று யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ளனர்.

எதிர்­வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்தல் குறித்து தமிழர் தரப்பில் பொது நிலைப்­பா­டொன்­றினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக தமிழ்த் தேசியக் கட்­சி­களை ஒன்­றி­ணைக்கும் முயற்­சியில் ஈடு­பட்ட யாழ்ப்­பாணம், கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யங்கள், அந்த முயற்­சி­யின் ­ப­ல­னாக ஐந்து தமிழ்க் கட்­சி­க­ளி­டையே இணக்­கப்­பா­டொன்றைத் தோற்­று­வித்­தி­ருந்­தன. 

இதுபற்றி யாழ். பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியம் நேற்று வெளி­யிட்­டுள்ள அறிக்­கையின் முழு வடிவம் வரு­மாறு:

இலங்­கைத்­தீவில் கடந்த ஏழு தசாப்­தங்­க­ளாக தமிழ் மக்கள் தொடர்ச்­சி­யாக அடக்­கு­மு­றை­க­ளுக்கும் புறக்­க­ணிப்­புக்கும் உள்­ளா­கி­வந்த நிலை­யி­லேயே இன்று நாம் ஒட்டு மொத்­த­மாக எமது பூர்­வீ­க­ ரீ­தி­யான தாய­கத்தின் இனப்­ப­ரம்பல் முற்று முழு­தாக மாற்­றி­ய­மைக்­கப்­பட்டு வரு­கின்­றது. கிழக்கில் தொடங்­கிய பௌத்த சிங்­கள மய­மாக்கல் இன்று வடக்­கிலும் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் நாம் அவற்றை தடுத்து நிறுத்த முடி­யா­த­வர்­க­ளாக கையறு நிலை­யி­லேயே இருக்­கின்றோம்.

ஈழத்­த­மி­ழர்­க­ளா­கிய நாம் எமக்குள் பல்­வேறு கட்­சி­க­ளாக பிள­வு­பட்டு எமது பேரம் பேசும் பலத்தை இழந்­து­விட்ட நிலையை இலங்­கையில் காலத்­திற்கு காலம் ஆட்­சிக்கு வரும் தலை­வர்கள் தமக்கு சாத­க­மாக கையாண்டு வடக்கு–கிழக்கில் சிங்­கள குடி­யேற்­றங்­க­ளையும் பௌத்த மய­மாக்­கல்­க­ளையும் அரங்­கேற்றி வரு­கின்­றனர். அது­மட்­டு­மல்­லாது தமிழ் மக்­க­ளி­னது உட­ன­டி­யாக தீர்வு காணப்­பட வேண்­டிய விட­யங்­க­ளான அர­சியல் கைதிகள் விடு­த­லை, பயங்­க­ர­வாதத் தடைச்­சட்ட நீக்­கம், இரா­ணுவ வெளி­யேற்­றம், மீள்­கு­டி­யேற்­றம், காணி விடு­விப்­பு, காணி அப­க­ரிப்பை தடுத்து நிறுத்­தல், இளை­ஞர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பை பெற்றுக் கொடுத்­தல், காணாமல் போன­வர்­களின் விவ­கா­ரத்­திற்கு தீர்வு காணு­தல் முத­லான விட­யங்­க­ளுக்கு கூட எம்மால் தீர்­வு­காண முடி­யாத துர்ப்பாக்­கிய நிலை­யினை எமது அர­சியல் தலை­வர்கள் உணர்ந்து கொண்­டி­ருந்தால் இத்­த­கைய பொது உடன்­பாட்டு முயற்சி ஒன்­றினை நாம் மேற்­கொண்டு பேரம் பேசும் பலத்­தினை அதி­க­ரிக்க வேண்டும் என்­கின்ற தேவையும் எண்­ணமும் எமக்கு ஏற்­பட்­டி­ருக்­காது. 

தமிழ் தேசிய பரப்பில் இருக்கும் கட்­சிகள் அனைத்தும் எதிர்­வரும் ஐனா­தி­பதித் தேர்­தலில் ஒரு­மித்த முடி­வொன்­றினை எடுப்­பதன் மூல­மாக நாம் இழந்த பேரம் பேசும் பலத்­தினை மீளப்பெற்­றுக்­கொள்­வதன் மூல­மா­கவே நாம் எமது அர­சியல் அபி­லா­ஷை­களை வென்­றெ­டுக்க சாத்­தி­ய­மான வழி­களில் முன்­ன­கர முடியும். இன்­றைய சூழலில் பேச்­சு­வார்த்­தைக்­கான கத­வுகள் திறக்­கப்­பட வேண்­டு­மாயின் எமது பேரம்­பேசும் பலத்தை மீண்டும் பெற்­றுக்­கொள்ள தமிழ்த்­தே­சிய நிலைப்­பா­டு­டைய கட்­சிகள் ஒரு­மித்து முடி­வெ­டுக்க வேண்­டி­யது காலத்தின் கட்­டாய தேவை என்­ப­தனை உணர்ந்து கொண்­ட­த­னா­லேயே நாம் இத்­த­கைய முயற்­சியில் கட்­சி­க­ளினை கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு அழைத்­தி­ருந்தோம். 

இந்த அடிப்­ப­டையில் தொடங்­கப்­பட்ட கலந்­து­ரை­யா­டலின் ஆரம்­பத்­தி­லேயே ஓர் பொது­வான இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டது. அதா­வது அனைத்து தமிழ் கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து தமிழ் மக்­களின் கோரிக்­கைகள் அடங்­கிய ஆவணம் ஒன்­றினை தயா­ரித்து அதனை முன்­வைத்து பிர­தான ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டலில் ஈடு­ப­டு­வது என்­பது ஏக­ம­ன­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டதன் பேரி­லேயே தொடர்ச்­சி­யாக கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­ற­துடன் கலந்­து­ரை­யா­டல்­களில் பங்­கு­கொண்ட கட்­சி­க­ளினால் முன்­மொ­ழி­யப்­பட்ட முன்­மொ­ழி­வு­களின் அடிப்­ப­டை­யி­லேயே இவ் ஆவ­ணத்­த­யா­ரிப்பு இடம்­பெற்­றது. 

தமிழ் மக்­களின் கோரிக்­கைகள் அடங்­கிய ஆவணம் செம்­மை­யான வகையில் தயா­ரிக்­கப்­ப­டு­வதில் தமது முழு­மை­யான ஒத்­து­ழைப்­பினை பங்­கு­பற்­றிய அனைத்து கட்­சி­களும் மனப்­பூர்­வ­மாக இணைந்து மேற்­கொண்­டி­ருந்­தன. இப்­பொது உடன்­பாட்டு ஆவ­ணத்தை தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணி, இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சி, தமிழ் மக்கள் கூட்­ட­ணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய அனைத்து கட்­சி­களும் முழு­மை­யாக ஏற்­றுக்­கொண்டபோதும் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள புதிய யாப்­பு­ரு­வாக்­கத்தின் இடைக்­கால அறிக்கை ஒற்­றை­யாட்­சியை முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­தாக அமை­வதால் அதனை நிரா­க­ரிக்க வேண்டும் என்­ப­த­னையும் குறித்த ஆவ­ணத்தில் உள்­வாங்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணி­யினர் பிரே­ரித்த வேளையில் அவ்­வி­டயம் தொடர்­பாக கட்­சிகள் அனைத்­தி­னாலும் ஒன்­றிற்கு ஒன்று முர­ணான வாதங்கள் முன்­வைக்­கப்­பட்டு நீண்ட நேர வாதப்­பி­ர­தி­வா­தங்கள் இடம்­பெற்றும் ஓர் முடிவு எட்­டப்­ப­டாத நிலை­யி­லேயே நான்­கா­வது கலந்­து­ரை­யாடல் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு ஓர் இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்தும் நோக்கில் கலந்­து­ரை­யாடல் மறு­நா­ளுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

அனைத்து கட்­சி­க­ளையும் இணங்க வைத்து பொது உடன்­பாட்டை கைச்­சாத்­திடும் நோக்­குடன் 14.-10.-2019 அன்று மதியம் 1.30இற்கு ஆரம்­ப­மான கலந்­து­ரை­யா­டலின் போது இடைக்­கால அறிக்­கை­யினை நிரா­கரிக்க வேண்டும் என்­ப­தனை ஆவ­ணத்தில் உள்­ள­டக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணி­யினர் உறு­தி­யாக இருந்த நிலையில் தமி­ழ­ர­சுக்­கட்­சி, புளொட் என்­பன அதனை ஆவ­ணத்தில் உள்­ள­டக்கக்கூடாது என்றும் இலங்கை அர­சாங்கம் சர்­வ­தே­சத்­திற்கு வழங்­கிய உறு­தி­மொ­ழியின் பேரி­லேயே யாப்பு உரு­வாக்க முயற்சி இடம்­பெ­று­கின்­றது. அதனை நாம் குழப்பிவிடக்­கூ­டாது என்­றனர். அதே­வேளை ரெலோ தரப்­பினர் கருத்து தெரி­விக்கும்போது, தாம் அவ் இடைக்­கால வரைபு வந்த போதே அதனை எதிர்த்­த­வர்கள் என்றும் இன்­றைய நிலையில் அதனை ஆவ­ணத்தில் உள்­வாங்கி தமி­ழ­ர­சுக்­கட்­சி­யி­ன­ருக்கு சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­து­வ­தனை தவிர்க்க வேண்­டு­மென்றும் தாம் ஒன்­றாக பய­ணிப்­ப­வர்கள் என்­பதால் இவ்­வி­ட­யத்தில் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யுடன் இணைந்து இவ் ஆவ­ணத்தில் இடைக்­கால அறிக்கை நிரா­க­ரிப்­பதை உள்­ள­டக்க தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­னார்கள். தமிழ் மக்கள் கூட்­டணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். தாம் இடைக்­கால அறிக்­கை­யினை வெளிப்­ப­டை­யாக நிராக­ரித்­துள்ள போதும் புதிய யாப்பு உரு­வாக்கம் கைவி­டப்­பட்ட நிலை­யிலும் இவ் ஆவ­ணத்தில் ஒற்­றை­யாட்சி நிரா­க­ரிப்பு என்ற வாசகம் இருப்­பதன் அடிப்­ப­டை­யிலும் இடைக்­கால அறிக்கை பற்றி இவ்­ஆ­வ­ணத்தில் உள்­ள­டக்க வேண்­டிய தேவை இல்லை எனவும் வாதிட்­டனர்.  ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்ன­ணி­யினர் இவ்­வா­தங்­க­ளுடன் உடன்­பட மறுத்து அதற்­கான நியா­யப்­பா­டு­க­ளி­னையும் வெளிப்­ப­டுத்­தி­னார்கள். குறிப்­பாக இவ்­யாப்பு உரு­வாக்க முயற்சி தொடர வாய்ப்­புள்­ள­மையை ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களின் கருத்­துக்­களை குறிப்­பிட்டு முன்­வைத்­தார்கள். அதனால் ஒற்­றை­யாட்சி இடைக்­கால வரைபு நிரா­க­ரிக்க வேண்டும் எனும் தமது நிலைப்­பாட்­டி­லி­ருந்து பின்­வாங்­க­வில்லை. இந்­நி­லையில் விவாதம் நீண்டு கொண்டு செல்­வ­தாலும் இதனை ஓர் முடி­வுக்கு கொண்டு வர வேண்டும் எனும் நோக்­கிலும் அடிக்­கு­றிப்­பி­லேனும் இடைக்­கால அறிக்கை நிரா­க­ரிக்­கப்­பட வேண்டும் என தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி பிரே­ரித்­தது என குறிப்­பி­டலாம் என சிவில் சமூக தரப்­பி­னரால் ஓர் கருத்து முன்­வைக்­கப்­பட்­டது. அதனை தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி ஏற்­றுக்கொண்ட போதும் ஏனைய கட்­சி­கள் அடிக்­கு­றிப்­பினை இடு­வது எம்முள் இணக்­கப்­பாடு இல்லை என்­ப­தனை தெளி­வாக காட்­டு­மென்­ப­துடன் பொது ஆவணம் பல­வீ­ன­ம­டையும் எனக் கூறி அதனை அடி­யோடு மறுத்­து­விட்­டனர். ஏற்­க­னவே நாம் எமது நிலைப்­பாட்­டினை கோரிக்­கை­யாக புதி­தாக உரு­வாக்­கப்­படும் அர­சி­ய­ல­மைப்பு ஒற்­றை­யாட்சி முறையை நிரா­க­ரித்­து தமிழர் தேசத்­தினை அங்­கீ­க­ரித்­து அதற்கு தனித்­து­வ­மான இறைமை உண்டு என்­ப­த­னை­யும் தமிழ் மக்கள் சர்­வ­தேச சட்­டத்தின் கீழ் சுய­நிர்­ணய உரி­மைக்கு உரித்­து­டை­ய­வர்கள் என்­ப­த­னையும் அங்­கீ­க­ரித்­து சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் இலங்­கையின் தமிழ்த் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட வேண்டும் என தெளி­வாக தீர்­வுத்­திட்டம் எப்­படி இருக்க வேண்டும் என்று குறிப்­பிட்ட நிலை­யிலும் இடைக்­கால அறிக்­கையை நிரா­க­ரித்தல் என்­பது இவ் ஆவ­ணத்தில் தேவை­யற்­ற­தென வாதிட்­டனர்.

இந்­நி­லையில் இறு­தி­யாக இடைக்­கால அறிக்கை நிரா­க­ரித்தல் வேண்டும் என்ற விட­யத்தை ஆவ­ணத்தில் உள்­ள­டக்­காது விடு­வது என்­ப­துடன் இது தொடர்­பாக தமிழ் தேசிய மக்கள் முன்­னணி உட்­பட கட்­சிகள் வெளிப்­ப­டுத்­திய கருத்­துக்­க­ளையும் நிலைப்­பா­டு­க­ளையும் நாம் ஊடக அறிக்கை ஒன்றின் மூல­மாக பகி­ரங்­கப்­ப­டுத்­து­வ­தென்றும் அனை­வரும் இதனை ஏற்­றுக்­கொண்டு கையொப்­ப­மிட வேண்டும் என ஏற்­பாட்­டா­ளர்கள் தரப்பால் வலி­யு­றுத்­தப்­பட்ட போதும் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணி­யினர் கையொப்­ப­மிட மறுத்­தனர். தொடந்தும் சிவில் சமூ­கத்­தினர் சார்பில் பங்குகொண்ட மத­கு­ரு­மார்கள் மேற்­கொண்ட சம­ரச முயற்­சிகள் வெற்றி அளிக்­காத நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணி­யினர் இப்பொது உடன்­பாட்டில் கையொப்­ப­மிட மறுத்­த­துடன் தமது கவ­லை­யி­னையும் பதிவு செய்து வெளி­யேறிச் சென்­றனர். 

இந்­நி­லையில் கையொப்­ப­மிட்ட ஐந்து கட்­சி­யி­ன­ரு­டனும் தொடர்ந்து கலந்­து­ரை­யா­டல்கள் மேற்­கொள்­ளப்­பட்டு ஐந்து கட்சித் தலை­வர்­களும் அடங்­கிய குழு­வினர் இவ்ஆவ­ணத்தை முன்­வைத்து மூன்று பிர­தான வேட்­பா­ளர்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடுபடுவதென்றும் அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நகர்வுகளினை தீர்மானிப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டது. 

தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும் என்று இம் முயற்சியில் இறங்கிய நாம்  ஐந்து கட்சிகள் உடன்பட்டு வந்த நிலையில் அவர்களிடம் இவ்பொது ஆவணத்தை ஒப்படைத்து இதனடிப்படையில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு தெரிவித்ததோடு அவர்கள் அரசியல் தலைவர்கள் என்ற வகையிலும் நாம் பொறுப்பு வாய்ந்த மாணவர்களாய் ஒன்றிணைக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டவர்கள் என்ற வகையிலும் இவ்விடயத்தினை அவர்களிடமே ஒப்படைத்து விலகிக்கொண்ட நிலையில் கலந்துரையாடல்களின் முன்னேற்றங்களின் அடிப்படையில் அரசியல் கட்சி தலைவர்களே தொடர்ச்சியாக இவ் விடயத்தினை கையாள்வார்கள்.

தேர்தல் தொடர்பான ஒருமித்த நிலைப்பாடு ஒன்றினை எடுக்கும் எமது முயற்சி மக்கள் முன் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இந்த நிலைப்பாட்டிலிருந்து மாறுவார்கள் எனில் மக்கள் இவ்விடயத்தில் சரியான முடிவினை எடுக்கும் வகையில் அவ்நகர்வுகளினை தொடர்ந்தும் அவதானித்த வண்ணம் இருத்தல் வேண்டும்.

பகிரவும்...