Main Menu

“பொதுஜன பெரமுனவுடான கலந்துரையாடலில் ஒருபோதும் கலந்து கொள்ள மாட்டேன்”

ஜனாதிபதி வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர் ஒருவரை நியமிப்பதாக இருந்தால் அது கட்சியின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

அத்தனகல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாமல் போனாலும் அடுத்துவரும் தேர்தல்களில் கட்சியை வெற்றிபெறச்செய்ய கட்சியின் வாக்குகளை தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஆனால் கட்சியின் தலைமை சில விடயங்களில் தனித்து தீர்மானம் எடுக்கின்றது.

அத்துடன் மீண்டும் அதிகாரத்தில் இருக்கும் நோக்குடனே பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறான நடவடிக்கைகள் எனது கொள்கைக்கு பொருந்தாது. அதனால் அவ்வாறான கலந்துரையாடல்களுக்கு நான் ஒருபோதும் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும் கூறினார்.

பகிரவும்...