Main Menu

புலவர் புலமைப்பித்தன் காலமானார்

சென்னையில் கவிஞர் புலவர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

அதிமுக முன்னாள் அவைத்தலைவரும், கவிஞருமான புலவர் புலமைப்பித்தன் (86) கடந்த 28-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி புலவர் புலமைப்பித்தன் காலமானார்.

இதனையடுத்து அதிமுகவினர் மற்றும் திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், நீதிக்கு தலை வணங்கு, நேற்று இன்று நாளை, பல்லாண்டு வாழ்க, நினைத்ததை முடிப்பவன், குமரிக்கோட்டம், அடிமைப்பெண், நல்ல நேரம் உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் புலவர் புலமைப்பித்தன்.

அதுமட்டுமின்றி சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாக்யராஜ் உள்பட பல பிரமுகர்களின் திரைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புலவர் புலமைப்பித்தன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.33 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அதிமுக பிரமுகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எம்ஜிஆரின் தீவிர தொண்டனாக இருந்த புலவர் புலமைப்பித்தன் அவர்கள் எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும்போது அரசவை கவிஞராக இருந்தவர் என்பதும் முன்னாள் அதிமுக அவைத் தலைவராக பதவியேற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...