Main Menu

புர்கினோ பாசோவில் 31 பெண்கள் உட்பட 35 பொதுமக்கள் பயங்கரவாதிகளினால் வெட்டிக்கொலை

புர்கினோ பாசோவின் வடக்கு சூம் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) 31 பெண்கள் பெண்கள் உட்பட 35 பொதுமக்களைக் கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமையினால்  மேற்கு ஆபிரிக்க நாட்டில் இரண்டு நாட்கள் தேசிய துக்க தினமாக ஜனாதிபதி ரோச் மார்க் கபோர் பிரகடனம் செய்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலை சூம் மாகாணத்தில் இராணுவப் பிரிவினரை தீவிரவாதிகள் தாக்கினர். பல மணி நேரம் இடம்பெற்ற இப்போராட்டத்தில், படையினர் அவர்களை விரட்டியடித்து ஏராளமான ஆயுதங்களையும் மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியதாக இராணுவத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மோதலில் சுமார் 87 தீவிரவாதிகள் மற்றும் உள்ளூர் பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அங்கிருந்து பயங்கரவாதிகள் தப்பி ஓடும்போது, ஒரு கோழைத்தனமான முறையில், 35 பொதுமக்களைக் கொன்றனர் என்றும் அவர்களில் 31 பெண்கள் அடங்குவதாகவும் அரசாங்கம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ஒரு சுரங்கப் படையின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்துள்ளார். ஒரு இஸ்லாமிய கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் இனப் பதட்டங்களைத் தூண்டிவிட்டு, நாட்டின் பெரும் பகுதிகளை இந்த ஆண்டு ஆட்சி செய்ய முடியாத இடங்களாக ஆக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...