Main Menu

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு யேமனில் இரண்டு மாத போர்நிறுத்தம்!

முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு யேமனில் இரண்டு மாத போர்நிறுத்தம் கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு தழுவிய அளவில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் ஒப்பந்தம் இதுவாகும்.

பல இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் முதல் நாள் இன்று (சனிக்கிழமை) ஆகும்.

சவுதி தலைமையிலான கூட்டணிக்கும் ஈரான் ஆதரவு ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் இன்று (சனிக்கிழமை) 16:00 மணிக்கு நடைமுறைக்கு வருகின்றது. மேலும், இருவரும் ஒப்புக்கொண்டால் நீடிக்கப்படலாம்
போர்நிறுத்தம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட யேமன் மக்களுக்கு ஒரு நிவாரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பாராட்டினார்.

மேலும், இவை முக்கியமான படிகள், ஆனால் அவை போதாது. போர் நிறுத்தம் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும், நான் முன்பு கூறியது போல், இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவது அவசியம்’ என கூறினார்.

யேமனில் ஜனாதிபதி மன்சூர் ஹாதி தலைமையிலான அரச படைகளுக்கும், ஈரான் ஆதரவு ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது.

இதில் யேமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகிறது. இதனால், விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிறுவல்கள் உள்ளிட்ட சவுதி இலக்குகள் மீது அடிக்கடி ஆளில்லா விமானத் தாக்குதல்களை ஹெளதிகள் நடத்தி வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, கிட்டத்தட்ட 400,000 பேரைக் கொன்ற போரில், 60 சதவீத பேர் பசி, சுகாதாரப் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பற்ற தண்ணீரால் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...