Main Menu

புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி – பெரும்பான்மையை இழந்தது காங்கிரஸ் அரசு

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இராஜினாமா செய்த நிலையில், நாராயணசாமி தலைமையிலான அரசை தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி அடைந்தது.

இதையடுத்து அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி சட்டசபையை விட்டு வெளியேறினார்.

புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 ஆகவும், எதிர்க்கட்சிகளின் பலம் நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 14 ஆகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...