Main Menu

புதிய போர்க்கப்பல்களை கட்ட இந்திய கடற்படை திட்டம்

நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிரான போரில் ஈடுபடும் போர்கப்பல்களை கட்ட இந்திய கடற்படை புதிய ஒப்பந்தங்களை செய்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள மத்திய அரசு நிறுவனமான கார்டன் ரீச் கப்பல் கட்டும் நிறுவனம்,கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனம் ஆகியவற்றுடன் இந்திய கடற்படை ஒப்பந்தம் செய்துள்ளது. இரு நிறுவனங்களும் தலா 8 போர்க்கப்பல்களை கட்டித்தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தலா 6,311 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்படும் ஒவ்வொரு போர்க்கப்பலும், 230 அடி நீளமும்,33  அடி அகலமும் கொண்டதாக இருக்கும் என்றும், மணிக்கு 46 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதோடு, நிற்காமல் 3300 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் திறனும் கொண்டிருக்கும் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.

பகிரவும்...