Main Menu

புடினை கடுமையாக விமர்சித்த ஜோ பைடனுக்கு ரஷ்யா கடும் கண்டனம்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடினை கடுமையாக விமர்சித்ததற்கு ரஷ்யா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘ரஷ்ய ஜனாதிபதி குறித்து மிகவும் மோசமான கருத்தை அமெரிக்க ஜனாதிதி ஜோ பைடன் வெளிப்படுத்தியுள்ளார். இருநாட்டு உறவில் சீரமைப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பதையே இது காட்டுகிறது’ என கூறினார்.

ரஷ்ய நாடாளுமன்ற மேலவையின் துணைத் தலைவர் கோன்ஸ்டான்டின் கொசசேவ் கூறுகையில், ‘இன்னொரு நாட்டுத் தலைவரை விமர்சிக்க மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஜனாதிபதி பொறுப்பை வகிக்கும் ஜோ பைடனுக்கு அழகில்லை’ என சாடினார்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு சாதகமான வகையில் ரஷ்யா செயற்பட்டதாக அண்மையில் வெளியிடப்பட்ட இரகசிய உளவுத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ஜோ பைடன், ‘விளாடிமீர் புடின் ஒரு கொலைகாரர். அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டதற்கு அவர் விலை கொடுக்க வேண்டியிருக்கும்’ என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...