Main Menu

பிரான்ஸில் 16 மாவட்டங்களுக்கு ஒரு மாதகால கொவிட்-19 உள்ளிருப்பு கட்டுப்பாடுகள் அமுல்!

பிரான்ஸில் 16 மாவட்டங்களுக்கு ஒருமாத கால கொவிட்-19 உள்ளிருப்பு கட்டுப்பாடுகள், நடைமுறைக்கு வந்துள்ளது.

நடைமுறைக்கு வந்துள்ள உள்ளிருப்பின் போது சில விடயங்களுக்கு அனுமதி அளிக்கவும், சில விடயங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த பட்டியல் மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளன. முழுமையான அனுமதி, நிபந்தனைகளுடன் கூட அனுமதி மற்றும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறுகையில், ‘கொரோனா மூன்றாவது அலை அதிகரித்து வருகிறது. எனவே, சில கட்டுப்பாடுகளுடன் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு நீடிக்கும். பாடசாலைகள், வணிகங்கள், நிறுவனங்கள் ஆகியவை இயங்கலாம்.

மக்கள் பொதுவெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவர். பாதிப்பு அதிகமாக உள்ள பகுதியிலிருந்து பிற பகுதிகளுக்குச் செல்ல நினைப்பவர்கள் அதற்குத் தகுந்த வலுவான காரணத்தைக் கொண்டிருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அத்தியாவசிய பொருட்களான மளிகை கடைகள் மற்றும் பாடசாலைகள் திறந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...