Main Menu

பிரெஞ்சு பொருளாதாரம் விரைவாக மீளும் – தேசிய புள்ளிவிவர நிறுவனம்

கொரோனா வைரஸ் தொற்று இந்த ஆண்டின் முதல் பாதியில் பிரெஞ்சு பொருளாதாரத்தை கடும் சரிவுக்குள் தள்ளியது, ஆனால் நாடு விரைவாக அதிலிருந்து மீளும் என பிரான்சின் தேசிய புள்ளிவிவர நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆண்டு முழுவதும் பொருளாதாரம் 9 சதவிகிதம் சுருங்கும் என்று பிரான்சின் தேசிய புள்ளிவிவரம் மற்றும் பொருளாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது இன்னும் குறிப்பிடத்தக்க மந்தநிலையைக் குறிக்கும் அதே வேளையில், அரசாங்கத்தின் திருத்தப்பட்ட 2020 வரவுசெலவுத் திட்டத்தில் 11% சரிவு என்ற கணிப்பு போல இது மோசமானதல்ல என்றும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினை அடுத்து ஐரோப்பிய பொருளாதாரங்களில், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியவை மிகவும் போராட்டத்தை எதிர்கொள்ளும் என ஐரோப்பிய ஆணைக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

பிரான்சில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியான 206,000 க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 29,936 இறப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...