Main Menu

பிரெக்ஸிற் காலக்கெடுவை ஜனவரி 31 வரை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி

பிரெக்ஸிற் காலக்கெடுவை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதித்துள்ளதாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் ரஸ்க் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பிரித்தானியப் பாராளுமன்றத்தால் ஒப்பந்தமொன்று அங்கீகரிக்கப்பட்டால் காலக்கெடுவிற்கு முன்னர் பிரித்தானியா வெளியேறுவதற்கான நெகிழ்வுத்தன்மைக்கும் ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி வழங்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் எட்டப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான பிரித்தானியா பாராளுமன்ற வாக்கெடுப்பு தோல்வியடைந்த நிலையில் பிரெக்ஸிற் காலக்கெடுவை நீடிப்பதற்கான கோரிக்கையை முன்வைப்பதற்கு பிரதமர் ஜோன்சன் கட்டாயப்படுத்தப்பட்டார்.

டிசம்பர் 12 ஆம் திகதி பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் முன்மொழிவுக்கு இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ள நிலையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

ஸ்கொட்டிஷ் தேசிய கட்சி மற்றும் லிபரல் ஜனநாயகக் கட்சி ஆகியவையும் டிசம்பர் 9 ஆம் திகதி பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு முன்மொழிந்துள்ளன.

பகிரவும்...