Main Menu

பிரித்தானிய பிரதமரின் தாயார் காலமானார்: அரச தலைவர்கள் இரங்கல்!

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனின் தாயார் சார்லோட் ஜோன்ஸன் வால், தனது 79 வயதில் காலமானார்.

தொழில்முறை ஓவியரான சார்லோட் ஜோன்ஸன் வால், மேற்கு லண்டனில் உள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில் திடீர் மற்றும் அமைதியான முறையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் கட்சி தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர், ‘பிரதமரின் இழப்பை அறிந்து மிகவும் வருந்துகிறேன். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கல்கள்’ என தெரிவித்துள்ளார்.

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் அமண்டா மில்லிங், ‘பொரிஸ் ஜோன்ஸன் மற்றும் அவரது குடும்பத்தினரை நினைத்துக்கொண்டிருக்கின்றேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உங்களுடன் உள்ளன’ என்று கூறினார்.

பிரதமரின் நண்பரான டோரி எம்.பி., கானர் பர்ன்ஸ், ‘பொரிஸ் ஜோன்ஸனின் அம்மாவின் மரணத்தைக் கேட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருடன் உள்ளன’ என குறிப்பிட்டுள்ளார்.

1970களில் ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான ஆணையத்தின் தலைவராக இருந்த ஜோன்ஸன் வால், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்பு 1963இல் ஸ்டான்லி ஜோன்ஸனை மணந்தார்.

இந்த ஜோடிக்கு நான்கு குழந்தைகள் உள்ளன. பொரிஸ், பத்திரிகையாளர் ரேச்சல், முன்னாள் அமைச்சர் ஜோ மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் லியோ.

இந்தநிலையில், 1979ஆம் ஆண்டு ஸ்டான்லி ஜோன்ஸனை, விவாகரத்து செய்தனர். 1988ஆம் ஆண்டில், அவர் அமெரிக்க பேராசிரியர் நிக்கோலஸ் வாலை மணந்தார் மற்றும் நியூயோர்க்கிற்கு சென்றார்.

அங்கு அவர் நகரக் காட்சிகளை வரைவதற்குத் தொடங்கினார். நிக்கோலஸின் மரணத்தைத் தொடர்ந்து 1996இல் அவர் மீண்டும் லண்டனுக்குத் திரும்பினார்.

40 வயதில், அவளுக்கு பார்கின்சன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அவர் ஓவியம் வரைவதைத் தொடர்ந்தார்.

பகிரவும்...