Main Menu

பிரித்தானியாவில் சொத்துக்கள் வாங்கும் வெளிநாட்டினருக்கு முத்திரை வரி உயர்த்தப்படும்: கொன்சர்வேற்றிவ் கட்சி

பொதுத்தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சி வெற்றி பெற்றால் பிரித்தானியாவில் சொத்துக்களை வாங்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் நிறுவனங்கள் பிரித்தானியக் குடியிருப்பாளர்களை விட 3% அதிக முத்திரை வரி செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டினருக்கான இந்த வரி உயர்வு பிரித்தானியாவில் வாழும் மக்கள் அதிகளவில் வீடுகளை வாங்குவதற்கும் அதிகரித்து வரும் வீடில்லாதவர்களின் நிலைமைகளைச் சமாளிப்பதற்கு உதவுமென கொன்சர்வேற்றிவ் கட்சி தெரிவித்துள்ளது.

டிசெம்பர் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சி வெற்றி பெற்றால் நடைமுறைக்கு வரும் இந்த வரி உயர்வின் மூலமாக ஆண்டுக்கு £120 மில்லியன் வரை கிடைக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் வீடுகளை வாங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது வரி விதிக்கப்படுமென தொழிற்கட்சியும் தெரிவித்துள்ளது. மேலும் தங்கள் பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகளை வாங்குவதற்கான முன்னுரிமை உள்ளூர் மக்களுக்கே வழங்கப்படும் எனவும் தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.

தற்போது, வெளிநாட்டுத் தனிநபர்களும் நிறுவனங்களும் பிரித்தானியாவில் வசிப்பவர்களைப் போலவே வீடுகளை எளிதாக வாங்கமுடியும். 2014 மற்றும் 2016 க்கு இடையில் லண்டனில் 13% வீடுகள் வெளிநாட்டவரால் வாங்கப்பட்டுள்ளன.

பகிரவும்...