Main Menu

பிரித்தானியாவின் ஊதிய பட்டியலில் இருந்து 650,000பேர் குறைந்துள்ளனர்!

பிரித்தானியாவின் ஊதிய பட்டியலில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 650,000ஆக குறைந்துள்ளதாக, அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தற்போது வேலை இழந்துள்ளவர்களுடன் சேர்த்து தொழில் சலுகையுடன் கூடிய வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 2.6 மில்லியனாக பதிவாகியுள்ளது.

இருப்பினும், இந்த அதிகரிப்பு பலருக்கு பெரிதான அச்சத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் ஊழியர்களை அரசாங்க ஆதரவுடைய ஃபர்லோ (furlough) திட்டத்தில் இணைத்துள்ளன.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இந்த திட்டம் முடிவடையும் வரை வேலைவாய்ப்பில் முழுமையான தாக்கத்தை உணரப்போவதில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, பிரித்தானியாவில் வேலை செய்த மொத்த வார நேரங்கள் 175.3 மில்லியன் அல்லது 16.7 சதவீதம் குறைந்து 877.1 மில்லியன் மணிநேரங்களாக குறைந்துவிட்டதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது.

1971ஆம் ஆண்டில் மதிப்பீடுகள் தொடங்கியதிலிருந்து இது மிகப்பெரிய வருடாந்திர குறைவு ஆகும்.

பகிரவும்...