Main Menu

பிரான்சில் முதல் டெங்கு காய்ச்சல் தாக்குதல்

பிரான்சில் முதன் முறையாக டெங்கு காய்ச்சல் தாக்குதல் ஒன்று பதிவாகியுள்ளது.  Auvergne-Rhône-Alpes மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று திங்கட்கிழமை செப்.23 ஆம் திகதி l’Agence Régionale de Santé (ARS)  சுகாதார அதிகாரிகள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். Rhône மாவட்டத்தின் Caluire-et-Cuire எனும் சிறு நகரைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இந்த டெங்கு காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தற்போது நலம்பெற்றுள்ளார் என்றபோதும், பிரான்சில் முதல் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நபராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.  தவிர, குறித்த நபர் சமீபத்தில் (கடந்த ஒரு வருடத்தில்) வெளிநாடுகள் எங்கேயும் பயணித்திருக்கவில்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அப்பிராந்தியம் முழுவதும் டெங்கு தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பகிரவும்...