Main Menu

திலீபனின் உருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப் பட்டது!

தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

போராளியின் தாயொருவர் ஈகைச்சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தியாக தீபம் உண்ணாவிரதமிருந்த இடத்தைச் சென்றடைந்தது நடைபயணம்

தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தியுடனான நடைபயணம் அவர் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த இடத்தைச் சென்றடைந்தது.

இதனையடுத்து அங்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், காணாமலாக்கபட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து‌கொண்டுள்ளனர்.

நல்லூரைச் சென்றடைந்தது திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி!

தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வவுனியாவில் ஆரம்பமான நடைபயணம்  நல்லூரை சென்றடைந்தது

குறித்த நடைபயணம் இன்று (வியாழக்கிழமை) காலை நாவற்குழி சந்தியிலிருந்து பயணித்த நிலையில், தற்போது நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை சென்றடைந்தது.

இதனையடுத்து அங்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், இன அழிப்பு மற்றும் காணாமலாக்கபட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியின் ஏற்பாட்டில் இந்த நடைபயணம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து தியாக தீபத்தின் உருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் இணைந்து கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகிய நடைபயணம், நேற்று நண்பகல் அளவில் நாவற்குழியைச் சென்றடைந்தது. அங்கு அஞ்சலி நிகழ்வுகள் பல இடம்பெற்றன.

அதனைத்தொடர்ந்து நாவற்குழியிலிருந்து இன்று அதிகாலை பயணித்த நடைபயணம் தற்போது நல்லூரைச் சென்டைந்துள்ளது.

பகிரவும்...