Main Menu

பிரான்சில் உள்ள இரஷ்ய உணவகங்களுக்கு கொலை மிரட்டல்

பிரான்சில் உள்ள இரஷ்ய உணவங்களுக்கு எதிராக பல கொலை மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் பதிவாகியுள்ளன.

உக்ரைன் மீதான இரஷ்யாவின் ஆகிரமிப்பை அடுத்தே இந்த எச்சரிக்கைகள் பதிவாகியுள்ளன. அநாமதேய மின்னஞ்சல்கள் மூலமாகவும், தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பரிசில் உள்ள மிக பழமையான இரஷ்ய உணவகமான Georges Kazarian உணவகத்துக்கு தினமும் அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் வருவதாகவும், அதில் கொலை மிரட்டல்கள் மற்றும் அவதூறான பேச்சுக்களும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லியோன், மார்செ போன்ற பெரு நகரங்களில் உள்ள இரஷ்ய உணவகங்களிலும் இந்த அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன.

இதேவேளை, தங்களது வருவாயில் பெருளவில் இந்த யுத்தம் ஆதிக்கம் செலுத்தியுள்ளதாகவும், யுத்தம் ஆரம்பித்ததன் பின் வாடிக்கையாளர்களின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பகிரவும்...