Main Menu

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட முழுமையான அறிக்கை

2019 ஆம் ஆண்டின் ஈஸ்டர் ஞாயிறு அன்று அன்று இடம்பெற்ற உலகையே உலுக்கிய கொடூரமான மற்றும் இரக்கமற்ற தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட கிட்டத்தட்ட 270 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

இதனை அடுத்து, பாதுகாப்புப் படைகள் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் விரிவான விசாரணைகளை அரசாங்கம், ஆரம்பித்தது. பல ஆண்டுகளாக மேற்கொண்ட உள்ளூர் மற்றும் சர்வதேச விசாரணைகள், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான ஐஎஸ்ஐஎஸ் குழு உறுப்பினர்களே பின்னணியில் இருந்தமையை காட்டியது.

எவ்வாறாயினும், செப்டம்பர் 5அன்று பிரிட்டிஷ் சனல் 4 தொலைக்காட்சி மூலம் தயாரிக்கப்பட்ட சமீபத்திய ஆவணப்படத் தொடர்பாக உறுதியான தீர்மானத்துடனும், உண்மைக்கு மாறாத அர்ப்பணிப்புடனும் பாதுகாப்பு அமைச்சு பதிலளிக்க விரும்புகிறது.

இந்த ஆவணப்படம் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் குற்றச்சாட்டை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மீதும், தற்போதைய இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி மீதும் மாற்றியுள்ளது.

36 ஆண்டுகளாக தேசத்திற்கு சேவையாற்றிய அர்ப்பணிப்புள்ள மூத்த இராணுவ அதிகாரிக்கு எதிராக தாக்குதலை திட்டமிட்டு , தாக்குதல்தாரிகளுக்கு உதவிய குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு வன்மையாக கண்டிக்கிறது.

மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் அமைச்சரின் ஆலோசகராக 2016 டிசம்பர் முதல் 2018 டிசம்பர் வரை சுரேஷ் சல்லி பணியாற்றினார். அவர் 2019 ஜனவரி 3 அன்று இந்தியாவுக்கு சென்று டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரி படிப்பை முடித்து 2019 நவம்பர் 30 அன்று இலங்கை திரும்பினார்.

சனல் 4 வீடியோ ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதியில் இந்த அதிகாரி இலங்கையில் இருந்ததில்லை. மேலும், கூறப்பட்ட காலப்பகுதியில் இந்த அதிகாரி நாட்டின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு எந்திரத்தில் பணியமர்த்தப்படவில்லை அல்லது எந்த பொறுப்புகளையும் வகிக்கவில்லை.

எனவே, பாதுகாப்பு அமைச்சு இந்த மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கிறது மற்றும் இத்தகைய தீங்கிழைக்கும் மற்றும் ஆதாரமற்ற கதையை வெளியிட்டதற்காக சனல் 4 மீது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்துகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து, இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் உண்மையை வெளிக்கொணர்வதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளன.

உள்ளூர் மற்றும் சர்வதேச தொழில் நிறுவனங்களால் நடத்தப்படும் வெளிப்படையான விசாரணைகளை எளிதாக்குவதன் மூலம் அவர்கள் அவ்வாறு செய்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றின் உன்னிப்பான பணி உட்பட இந்த விசாரணைகள், தாக்குதலுக்கான தீவிரவாதக் குழுவின் பொறுப்பை தொடர்ந்து உறுதிப்படுத்தியுள்ளன.

அவுஸ்ரேலிய பெடரல் பொலிஸ் மற்றும் அமெரிக்காவில் உள்ள பெடரல் பீரோ இன்வெஸ்டிகேஷன் நடத்திய விரிவான விசாரணையை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டியது அவசியம். அமெரிக்க நீதித்துறை வழங்கிய அடுத்தடுத்த தீர்ப்புடன், உள்ளூர் விசாரணைகளின் கண்டுபிடிப்புகளை மீண்டும் உறுதிப்படுத்தியது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக, பாதுகாப்பு அமைச்சு இந்த பொய்யான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரிப்பதோடு, உண்மை, நீதி மற்றும் தேசத்தின் நல்வாழ்வுக்கான அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துகிறது.

பகிரவும்...