Main Menu

பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த 30 அகதிகள் வெளியேற்றம்!

பிரான்ஸின் வடக்கு பரிஸில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த 30 அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வடக்கு பரிசில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருடன், பல்வேறு தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து இந்த வெளியேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

சூடான், எரித்திரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகளே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் மொத்தமாக 24 கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும், அவை அனைத்தும் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பிரான்ஸில் இவ்வாறு மாதந்தோறும் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருக்கும் அகதிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...