Main Menu

பரிஸ் காவல்துறை தலைமையகத்தில் தாக்குதல் – ஐவர் பலி

பரிஸ் காவல்துறை தலைமையகத்துக்குள் பணி புரிந்த நபர் ஒருவர் உள்ளிருந்த பெண் அதிகாரி ஒருவரையும்
3 காவல் துறையினரையும் தாக்கியுள்ளார். இதில் நால்வரும் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மேலும் காயமடைந்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை 13:00 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் கத்தி ஒன்றின் மூலம் அங்கிருந்த அதிகாரியையும் , 3 காவல் துறையினரையும் தாக்கியிருந்ததாகவும் இதனால் அனைவரும் உயிரிழந்துள்ளனர்
எனவும் அறிய முடிகிறது.

அதைத் தொடர்ந்து சக அதிகாரி ஒருவர் தனது துப்பாக்கி மூலம் ஆயுததாரியை சுட்டு வீழ்த்தியதாகவும் அறிய முடிகிறது. இதில் ஆயுததாரி உயிரிழந்துள்ளார்.

உள்துறை அமைச்சர் Christophe Castaner சம்பவ இடத்துக்கு விரைந்து பார்வையிட்டுள்ளார்.
தற்போது குறித்த ஆயுததாரியின் மனைவி கைது செய்யப்பட்டு அவர்களது இல்லம் காவல் துறையினரால் சோதனையிடப்பட்டு வருகிறது.

குறித்த நபர் கடந்த 2003ம் ஆண்டிலிருந்து காவல் துறை தலைமையகத்தில் பணி புரிந்தவர் என்பதும் அத்துடன் 45 வயதுடைய இந்நபர் கடந்த 18 மாதங்களாக இஸ்லாமிய மதத்தை தழுவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...