Main Menu

பதவி விலகும் திகதியை பிரதமர் அறிவித்தார்!

ஜூன் மாதம் 7 ஆம் திகதி கொன்சர்வேற்றிவ் தலைவர் பதவியிலிருந்து விலகுதாக பிரதமர் தெரேசா மே சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியான கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவரே பிரதமராக பதவி வகிப்பதற்கு உரிமையுடைய காரணத்தால் பிரதமர் பதவியிலிருந்தும் தெரேசா மே விலகுவாரென்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்னர் பிரதமர் தெரேசா மே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரெக்ஸிற் மீதான மக்கள் வாக்கெடுப்பின் முடிவை கெளரவிப்பதற்கு என்னால் இயன்றதை நான் செய்துள்ளேன்.

மக்களுக்கு பிரெக்ஸிற்றை வழங்க முடியவில்லை என்பது எனக்கு ஆழ்ந்த கவலையை அளிக்கிறது. ஆனாலும் புதிய பிரதமரே நாட்டுக்கு நல்லது என நான் நினைக்கிறேன்.

எனது வாழ்க்கையின் கெளரவமான பணியாக இருந்த பிரதமர் பதவியிலிருந்து இன்னும் சில நாட்களில் நாட்களில் நான் விலகுவேன். நான் இந்த நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர், ஆனால் நிச்சயமாக கடைசி பெண் பிரதமர் இல்லை.

நான் நேசிக்கும் இந்த நாட்டுக்கு சேவை செய்ய கிடைத்த மகத்தான வாய்ப்புக்கு நீடித்த நன்றியுணர்வுடன் நான் பதவி விலகுகிறேன் என உணர்வுபூர்வமான தமது அறிக்கையில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜூன் 7 ஆம் திகதி பிரதமர் கொன்சர்வேற்றிவ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலக்கியத்தைத் தொடர்ந்து புத்திய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி ஆரம்பிக்கவுள்ளது.

கொன்சர்வேற்றிவ் கட்சி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை தாம் பிரதமர் பணியைத் தொடரவுள்ளராகவும் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பகிரவும்...