Main Menu

பதவியை இராஜினாமா செய்ய தயாரான ரணில், கோட்டா

ஜூலை 9 போராட்டத்தியன் வெற்றியை அடுத்து ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி பதவி விலகுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் பதவி விலகுமாறு கட்சித் தலைவர் நேற்று தீர்மானித்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் தற்காலிக ஜனாதிபதியாக சபாநாயகர் பதவியேற்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி அரசாங்கத்தை பொறுப்பேற்க வழிவகை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரத்தில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் உலக உணவு திட்ட பணிப்பாளர் விஜயம், ஐ.எம்.எப். கடன் திட்டம் இறுதியாகவுள்ளமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை மேற்கொள்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...