Main Menu

பங்களாதேஸ் பாக்கிஸ்தான் இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும் ஆபத்தான நிலையில் – உலக சுகாதாரஸ்தாபனம்

இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேசில் வாளி மோசமாக மாசடைந்துள்ளதை வெளிப்படுத்தும் புதிய ஆய்வு வெளியாகியுள்ளது.

உலக சுகாதாரஸ்தாபனம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வின்படி 2023 இல் உலகில் அதிகளவு வளிமாசடைந்த நாடுகளில் ஒன்றாக  பாக்கிஸ்தான் காணப்பட்டுள்ளது.

இந்தியா பங்களாதேசும் இந்த பட்டியில் இடம்பெற்றுள்ளன.

நுரையீரல்களிற்கு பாதிப்பபை ஏற்படுத்தும் காற்றில் காணப்படும்; சிறிய துகள்களான பிஎம்2.5 இன் அளவு பாக்கிஸ்தானில் 79.9 மைக்கிரோகிராமா காணப்பட்டுள்ளது- பங்களாதேசில் இது 73.7 வீதமாக காணப்படுகின்றது.

வளிமண்டலத்தில் இத்தகைய பொருட்கள்5 மைக்கிரோகிராமிற்கு மேல் காணப்பட்டால் அதனால் பாதிப்புகள் ஏற்படலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

தென்னாசியாவின் காலநிலை மற்றும் புவியியல் அமைவிடம் காரணமாக  இந்த பிஎம்2.5 என்ற துகள்கள் காணப்படுகின்றன என சுவிட்சர்லாந்தை சேர்ந்த வளிகண்காணிப்பை அமைப்பை சேர்ந்த கிறிஸ்டி  தெரிவித்துள்ளார்.

மாசு செல்வதற்கு இடமில்லாதது ஒரு காரணம் என தெரிவித்துள்ள அவர் விவசாய செயற்பாடுகள் கைத்தொழில் மற்றும் பொதுமக்கள் நெரிசலான விதத்தில் வாழ்வதும் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை மேலும் மோசமடைந்த பின்னரே மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2022 இல் வளிமோசமாக மாசடைந்த நாடுகளின் பட்டியலில் பங்களாதேஸ் ஐந்தாவது இடத்திலும் இந்தியா 8வது இடத்திலும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேசில் சராசரி வயதிற்கு முன்னர் ஏற்படும் இறப்புகளிற்கு வளிமாசடைதலும் ஒரு காரணம் என டாக்காவின் பல்கலைகழக நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்,மேலும் இதன் காரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நான்கு அல்லது ஐந்து வீதத்தினை சுகாதார சேவைகளிற்காக செலவிடவேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலும் வளிமாசடைதல் கடந்த வருடம் மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது – புதுடில்லியே மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஐந்து வருடங்கள் வளிமாசடைதலில் வீழ்;ச்சி காணப்பட்ட நிலையில் கடந்த வருடம் சீனாவும் வளிமாசடைதலை எதிர்கொண்டுள்ளது.

அவுஸ்திரேலியா நியுசிலாந்து எஸ்டோனியா பின்லாந்து உட்பட சில நாடுகளே  உலக சுகாதார ஸ்தாபனத்தின் தராதரத்தை எட்டியுள்ளன.

பகிரவும்...