Main Menu

பகைமைகளால் எதையும் சாதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

யாழ். மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கத்தினர் போக்குவரத்து சேவையில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது நல்லாட்சி காலத்தில் உருவான வழித்தட முரண்பாடுகள் தரிப்பிடப் பிரச்சினைகள், வழித்தட அனுமது கட்டண அதிகரிப்பு , அதிகாரசபையின் நிர்வாக உதாசீனம், இ.போ.ச – தனியார் சேவை முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு பிராசினைகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

சங்கப் பிரதினிதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய பின் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் –

மக்களது பிரச்சினைகளுக்கு மக்களே காரணம். இதை இனியாவது மக்கள் உணரவேண்டும். ஆனால் மக்கள் அவ்வாறான நிலைக்கு இன்னமும் வராதிருப்பது கவலைக்குரியது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் நான் என்னை நம்புங்கள் என்று உங்களிடம் கோரியிருந்தேன்.

ஆனால் நீங்கள் என்னை நம்பாது சஜித்துக்கு வாக்களித்திருந்தீர்கள்.இதனால் மறுபடியும் தமிழ் மக்கள் தேசியவாதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

பகைமைகளால் எதையும் சாதிக்க முடியாது என உலக வரலாறுகள் எமக்கு கற்றுத்தந்திருக்கின்றன.இதற்கு இரண்டாம் உலகயுத்தத்தில் அமெரிக்காவால் அழிக்கப்பட்ட ஜப்பானும் ஜேர்மனியும் பகைமையை மறந்ததாலேயே இன்று தலைனிமிர்ந்து நிற்க காரணம்.

அதனால் தான் நான் கூறிவருகிறேன் இன நல்லுறவினூடாக சாதிக்க முடியும் என்று. அனால் எமது இனம் அவ்வாறான நிலைக்கு வருவதாக இல்லை. இதை தமிழ் தேசியம் என்ற போர்வையே தடுத்து வருகின்றது.

தற்போது நான் அமைச்சு பொறுப்பை ஏற்றிருந்தாலும் இரண்டு பெரும் சுமைகளுடன் நான் சமுத்திரத்தில் தள்ளிவிடப்பட்டுள்ளதாகவே நினைக்கின்றேன்.

தேசிய அமைச்சு மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினை என்ற அந்த இரணடு சுமைகளுடன் நிச்சயம் கரைசேர்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

குறைந்தது அடுத்த ஐந்து வருடங்களுக்கு கோத்தாபய ராஜபக்சவே ஜனாதிபதி. நான் முன்னுணர்ந்தே அவரை ஆதரிக்கச் சொல்லியிருந்தேன். அந்தவகையில் அடுத்து வரவுள்ள பொதுத் தேர்தலில் நீங்கள் யாரை தெரிவு செய்யவேண்டும் என்பதை உணருங்கள். என்னிடம் உங்கள் அரியல் அதிகாரத்தைதாருங்கள் தீர்வுகாணப்படக் கூடிய பிரசைனைகள் அனைத்திற்கும் விரவில் தீர்வுகண்டுதருவேன் என்றார்.

பகிரவும்...