Main Menu

நைஜீரியாவில் 200 மாணவர்கள் ஆயுதக்குழுவினால் கடத்தல்

நைஜீரியாவில் ஆயுதக்குழுவொன்றினால் இருநூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் என ஆசிரியர் ஒருவரும்  உள்ளூர் மக்களும் தெரிவித்துள்ளனர்.

நைஜீரியாவின் வடமேற்குப் பிராந்தியத்திலுள்ள கதுனா மாநிலத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கதுனா மாநிலத்தின் உள்ளூராட்சி அதிகாரிகள் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், எத்தனை பேர் கடத்தப்பட்டனர் என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக உள்ளூர்வாசியொவர் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 280 இற்கும் அதிகம் என உள்ளூர்வாசியான முஹம்மத் ஆதம் தெரிவித்துள்ளார்.

கப்பம் கோருவதற்காக மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் நைஜீரியாவில் பல தடவைகள் இடம்பெற்றுள்ளன.

பகிரவும்...