Main Menu

நேபாளத்தின் புதிய வரைபடம் தன்னிச்சையானது : இந்தியா கண்டனம்!

இந்திய பகுதிகளுடன் கூடிய புதிய வரைபடம் குறித்த சட்டமூலம் நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய பகுதிகளுடன் கூடிய புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் அளிக்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த சட்டமூலம் நேற்று (சனிக்கிழமை) அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியா,  நேபாளத்தின் புதிய வரைபடம் தன்னிச்சையானது என்றும்  அதற்கு வரலாற்று ஆதாரம் எதுவும் கிடையாது  எனவும் குறிப்பிட்டுள்ளது.

நேபாளத்தின் இந்த செயல் இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ள இந்தியா  நேபாள அரசின் செயல்பாடுகளால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேபாள எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதிகளான  லிபுலேக்,  காலாபனி,  லிம்பியதுரா ஆகிய பகுதிகளை நேபாளம் உரிமைகோருகிறது.  இந்நிலையில் இது குறித்த புதிய வரைபடத்தை நேபாள அரசாங்கம் திருத்த சட்டமூலமாக நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...