Main Menu

நியூஸிலாந்தில் 53ஆவது பொதுத் தேர்தல்: மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!

நியூஸிலாந்தில் 53ஆவது பொதுத் தேர்தலில் நியூசிலாந்தர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

வாக்குச் சாவடிகளுக்கான கதவுகள் காலை 9 மணிக்குத் திறக்கப்பட்டன. இரவு 7 மணிக்கு வாக்கெடுப்பு முடிவடையும்.

எந்தவொரு கட்சியால் நாட்டை வழிநடத்த முடியும் மற்றும் தொற்றுநோயை சிறப்பாக கையாள முடியும் என்பதே தேர்தலின் மையமாகும்.

1.7 மில்லியனுக்கும் அதிகமான நியூசிலாந்தர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். வியாழக்கிழமை இறுதிக்குள் 1,742,960பேர் வாக்களித்ததாக தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த தேர்தலில் முன்கூட்டியே வாக்களித்த 1.2 மில்லியனை விட இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம். இது வாக்காளர் பட்டியலில் சுமார் 3.5 மில்லியன் நியூசிலாந்தர்களில் பாதி பேரைக் கொண்டுள்ளது. இன்று இரவு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...