Main Menu

நாள் ஒன்றுக்கு 10,000 லிற்றர் கைகழுவும் ஜெல் தயாரிப்பு

பரிசில் உள்ள பிரபலமான மருந்தகம் ஒன்று, கை கழுவும் ஜெல் தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்தவெளி வீதியில் உருவாக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பிரான்சில் வேகமாக பரவுவதால், கை கழுவும் ஜெல் தேவை அதிகரித்துள்ளது. தற்போது இங்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 10,000 லிற்றர் ஜெல் தயாரிக்கப்படுகின்றது. இங்கு தயாரிக்கப்படும் கை கழுவும் ஜெல் இல்-து-பிரான்சுக்குள் உள்ள பல மருத்துவமனைகள், மருந்தகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.  மேலும், வீதியில் வைத்து இந்த ஜெல் தயாரிக்கப்படுவதால் திருட்டு சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க காவல்துறையினர் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்துள்ளனர். இப்பகுதியை சுற்றியுள்ள அனைத்து வீதிகளையும் இரவுபகலாக காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 

பகிரவும்...