Main Menu

நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றியது தற்போதைய ஆட்சியாளர்களே – யாழ். ஆயர்

நமது நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானபிரகாசம் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதாரநெருக்கடி நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “74 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டவர்கள் மக்களை தம்முடைய வாக்குகளுக்காக பாவித்தார்கள் ஆனால் இந்த நாட்டிலிருந்த வளத்தை எல்லாம் சுரண்டி விட்டார்கள் ஒருவிதமாக கடைசியில் மிக பாரதூரமான சுரண்டல்களுடன் நாடு பிச்சை எடுக்கின்ற நாடாக வந்துவிட்டது.

இந்த சமுத்திரத்தின் முத்து என்று சொல்லப்பட்ட இந்த நாடு இன்று பிச்சை எடுக்கின்ற நாடாக மாறி உள்ளது இதற்கு காரணமான அனைவருமே மறுமொழி சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

ஏனென்றால் மக்களை இந்த நாட்டின் குடிமக்களாக பார்க்கவில்லை ஆனால் தமது வாக்குக்காக பாவித்துள்ளார்கள் இந்த நாட்டின் பிரதிகள் என்று கூறினால் எங்களுடைய பிரச்சனை எல்லாம் தீர்ப்பதற்கு வழிமுறை உள்ளது அதுகளைச் செய்யாமல் மக்களை வாக்குகளுக்காக பாவித்து இருக்கின்றார்கள்.

மக்களை ஏமாற்றி வாக்கினை பெற்றிருக்கின்றார்கள் அவ்வாறு நாட்டு மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று நாட்டை சுரண்டப்படுகிறதால் இன்றைய நாடு இவ்வாறு படுகுழியில் போய் உள்ளது.

அண்மையில் ஐ எம் எப் நிறுவனம் பல கேள்விகளை கேட்க இருந்தது முன்னாள் பிரதம மந்திரியிடம் 37 கேள்விகள் அவர்களால் கேட்கப்பட இருந்தது அதாவது ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் கேட்க விருந்தார்கள்.

ஆனால் அவர் வைத்தியசாலையில் அனுமதி ஆகிவிட்டார்அதனால் அவர்கள் கேட்க வேண்டிய கேள்வியினை கேட்காது சென்று விட்டார்கள்.

எந்த நாடும் எமக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்றார்கள் ஆனால் இந்த மோசடி ஊழல் நிறைந்த இந்த நாட்டு அரசாங்கத்தை நம்பி எந்த நாடும் நமக்கு உதவுவதற்கு தயாராக இல்லை
அதனை முதலில் நிவர்த்தி செய்தால் மாத்திரமே எமக்கு ஏனைய நாடுகளின் உதவி கிடைக்கும் ஆனால் அதற்கு பொறுப்பானவர்கள் ஓடி ஒளிந்து விட்டார்கள் இந்த நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்களின் பெருந்தன்மையால் இந்த நாடு ஒரு பிச்சைக்கார நாடாக மாறிவிட்டது” என தெரிவித்தார்

பகிரவும்...