Main Menu

நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது!

ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி, கடந்த வருடம் விசத்தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், நாடு திரும்பிய அவரது விமானம், மொஸ்கோவில் இருந்து ஷெரெமெட்டியோ விமான நிலையம் நோக்கி திருப்பிவிடப்பட்டு, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன் மீது மேற்கொள்ளப்பட்ட விசத்தாக்குதலுக்கு ரஷ்ய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என நவால்னி குற்றம் சுமத்தியுள்ளார். எனினும், இந்த கருத்தை முற்றாக மறுப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் வெளியானதும், ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நவால்னியை அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

நவால்னிக்கு விசம் வைக்கப்பட்டது குறித்து வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென ரஷ்யாவை ஜேர்மனி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

நோவிசோக் நச்சுப்பொருளை பயன்படுத்தி, அலெக்சியை கொலை செய்ய முயற்சி நடந்ததை பிரான்ஸ் மற்றும் சுவீடன் ஆய்வகங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...