Main Menu

நவிகோ மாதாந்த பயணசிட்டைகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு இழப்பீடு

மார்ச் மாதத்தில் நவிகோ மாதாந்த பயணசிட்டைகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இல்-து-பிரான்சுக்கான முதல்வர் valérie pécresse இதனை அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உள்ளிருப்பு சட்டம் நடைமுறையில் இருக்கின்றது. இச்சமயத்தில் மார்ச் மாசத்துக்கான நவிகோ மாதாந்த பயண அட்டையை பெற்றவர்கள் அனைவருக்கும் இழப்பீடு தொகை திருப்பி அளிக்கபடும் என அவர் உறுதியளித்துள்ளார்.  வயதுவந்தோருக்கான நவிகோ அட்டை, Imagin’R நவிகோ மற்றும் முதியவர்களுக்கான நவிகோ அட்டை என அனைத்து அட்டைகளுக்குமான முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும் என valérie pécresse தெரிவித்தார். ஏப்ரல் மாதத்தில் இந்த தொகை மீளளிக்கப்படும் என அறிய முடிகிறது.  மார்ச் மாத ஆரம்பத்தில் இருந்து பொது போக்குவரத்துக்கள் குறைக்கப்பட்டு, இன்று மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்துக்கள் மாத்திரம் சேவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...