Main Menu

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் – கம்மன்பில

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பதவி விலகாவிட்டால் இந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நகர்த்த திட்டமிட்டபோது, அவர்களுக்கு குறைந்தபட்சம் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அவ்வாறு இல்லையெனில் குறித்த பிரேரணை அரசாங்கத்திற்கு நம்பிக்கை பிரேரணையாக மாறும் என்றும் தெரிவித்தார்.

பகிரவும்...