Main Menu

நட்புத் தேடிக் காவல்துறையைத் தொடர்புகொண்ட சிறுவன்

ஃபுளோரிடாவில் தனிமையில் வாடிய சிறுவன் தன்னோடு விளையாட நண்பன் வேண்டும் என்று கேட்டுக் காவல்துறையைத் தொடர்புகொண்டுள்ளான்.

அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் இருந்த தொலைபேசியைப் பயன்படுத்தி 911 என்ற எண்ணைத் தொடர்புகொண்ட 6 வயதுச் சிறுவனிடம் சட்ட அமலாக்க அதிகாரி ஒருவர் பேசியிருக்கிறார்.

அம்மாவோடு ஏற்பட்ட வாக்குவாதத்துக்குப் பிறகு சிறுவன் காவல்துறை எண்ணை அழைத்ததாக அதிகாரிகள் DailyMail.com இணையப்பக்கத்திடம் தெரிவித்தனர். வீட்டில் சகோதரர்கள் இருந்தாலும் சிறுவனுக்கு அவர்களோடு விளையாட விருப்பமில்லை.

சிறுவனின் அழைப்பைத் தொடர்ந்து அவனின் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார் வைட் (white) எனும் அதிகாரி.

அப்போதுதான் சிறுவனின் அம்மாவுக்கு நடந்தது பற்றித் தெரியவந்துள்ளது.

வீட்டுக்குச் சென்ற அதிகாரி பொறுமையோடும் கனிவோடும் சிறுவனிடம் பேசியிருக்கிறார்.

அவனோடு நேரம் செலவிட்டு, அவசரத் தொலைபேசி எண்ணை முறையாகப் பயன்படுத்துவது எப்படி என்றும் சொல்லிக்கொடுத்துள்ளார்.

அதிகாரியும் சிறுவனும் எடுத்துக்கொண்ட படங்களைச் சமூக ஊடக வாசிகள் பார்த்துப் பாராட்டியுள்ளனர். 

பகிரவும்...