Main Menu

இலங்கைக்கு ஹனிமூன் சென்ற லண்டன் இந்திய பெண் மர்மச் சாவு

இலங்கைக்கு ஹனிமூன் சென்ற இந்திய இளம் பெண், மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து விசாரணை முடியும் வரை அவர் கண வரை விடுவிக்க முடியாது என்று இலங்கை தெரிவித்துள்ளது.

லண்டனைச் சேர்ந்தவர் கிளன் சந்தாரியா (33). இவர் வடக்கு லண்டனில் உள்ள பின்ச்லே பகுதியில் வசித்து வருகிறார். அங்கு செல்போன் கடை ஒன்றை வைத்திருக்கிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட உஷிலா படேலும் (31) காதலித்து வந்தனர். ஏப்ரல் 19 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். ஆறு நாட்களுக்குப் பிறகு இலங்கைக்கு ஹனிமூன் சென்றனர். அங்கு காலே பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ரிசார்ட்டான அமரியில் அறை புக் செய்து வந்து தங்கினர். இங்கு சில நாட்கள் இருந்துவிட்டு மாலத்தீவு செல்ல திட்ட மிட்டிருந்தனர்.

இந்நிலையில் ஏப்ரல் 25 ஆம் தேதி இரண்டு பேருக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்த வாந்தி மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த படேல், திடீரென்று மரணமடைந்தார். அவர் இறப்புக்கு ஓட்டல் உணவு தான் காரணமென்றும் அவர்கள் அளித்த உணவில் ஏதோ கெட்ட வாடை வீசியது என்றும் தெரிவித்துள்ளார், சந்தாரியா. ஆனால், தங்கள் உணவு தரமானது என்று மறுப்புத் தெரிவித்துள்ளது ஓட்டல் நிர்வாகம்.

உடலில் நீர்வறட்சி மற்றும் தொடர் வாந்தி காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக உடற்கூறாய்வு அறிக்கைத் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் விசாரணை முடியும் வரை சந்தாரியாவை நாட்டுக்கு அனுப்ப மறுப்புத் தெரிவித்துள்ளனர் இலங்கை போலீசார். இதுபற்றி சந்தா ரியா லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘’என் மனைவி இறந்துவிட்டார். இருந்தாலும் தினமும் அவரிடம் பேசிக் கொண்டுதா ன் இருக்கிறேன். நான் சொல்வதை கேட்பதற்கு யாரும் தயாராக இல்லை. மொத்த உலகமும் எனக்கு எதிராக இருப்பதாக உணர்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

அவர் நாடு திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக இங்கிலாந்து வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. 

பகிரவும்...