Main Menu

தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் தென்கொரிய பிரதிநிதி அமெரிக்கா விஜயம்

தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் தென் கொரியாவின் உயர்மட்ட பிரதிநிதி அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அமெரிக்காவின் தேர்தல் விவகாரங்களை பொருட்படுத்தாமல் இரு தரப்பு உறவினை பலப்படுத்துமாறு தென்கொரியா அண்மையில் அமெரிக்காவை வலியுறுத்தியிருந்த நிலையில் குறித்த விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தென் கொரிய வெளி விவகார அமைச்சர் காங்-கியுங் வாஹ் நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வொஷிங்டன் பயணமாகவுள்ளதாக தென்கொரிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருந்த நிலையில், அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ திட்டமிட்டிருந்த தென்கொரிய விஜயம் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து மைக் பொம்பியோவின் அழைப்பின் பேரில் தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த விஜயத்தின் போது, தென் கொரிய வெளிவிவகார அமைச்சர், வட கொரிய ஏவுகணை விவகாரம், இருதரப்பு இறக்குமதி ஏற்றுமதி வர்த்தகம் மற்றும் இருதரப்பு பிராந்திய விவகாரங்கள் ஆகியவை தொடர்பாக அமெரிக்க உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார்.

பகிரவும்...