Main Menu

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளராக சமன் ரத்நாயக்க

சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக, சமன் சிறி ரத்நாயக்கவை நியமிப்பதற்கு, அரசியலமைப்பு சபை அங்கீகாரம் அளித்துள்ளது.

நேற்று நடந்த அரசியலமைப்பு சபைக் கூட்டத்தில் இந்த நியமனத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் செயலகம் தெரிவித்துள்ளது.

சமன் சிறி ரத்நாயக்க மேலதிக தேர்தல்கள் ஆணையாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...