Main Menu

அரசாங்கத்தை குழப்பும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் – கந்தசாமி பிரபு

அரசாங்கத்தை குழப்புகின்ற எந்த ஒரு தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒருபோதும் ஆதரவு வழங்க மாட்டார்கள் கடந்த கால ஆட்சியாளர்களைப்போல் நாம் விலைவாசிகளை தீர்மானிப்பதில்லை என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (23.11.2026) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

சர்வதேச சமூகம் எமது வரவு செலவுத் திட்டத்தைப் பற்றி நன்கு புரிந்து உள்ளது. ஆனால் எமது நாட்டில் உள்ள ஒரு சில அறிவுகெட்ட ஊழல்வாதி களுக்கும், நாட்டை சீரழிக்க வேண்டும் என்ற கனவுகள் நினைவாகாத கீழ்த்தரமான சில அரசியல்வாதிகள் சில தொழிற்சங்கங்களுடன் ஒன்றிணைந்து சில வேலை நிறுத்த போராட்டங்களை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.

தொழிலாளர் வர்க்கத்திலிருந்து வந்த ஆட்சியாளர்கள் நாம் ஊழியர்களுக்கு  வேண்டிய சகல நலங்களையும்  முன்னெடுக்க தயாராக இருக்கின்றோம்

இருப்பினும் சம்பள முரண்பாடு சம்பந்தமாக ஏற்றத்தாழ்வுகள் சம்பந்தமாக இருக்கலாம் இவை நாம் கொண்டு வந்த விடயம் அல்ல. நாம் தொடர்ச்சியாக சம்பள உயர்வினை வழங்கி வருகின்றோம். இருப்பினும் அவர்களது மேலதிக கொடுப்பனவள் சம்பந்தமாக சில முரண்பாடுகள் உள்ளன அவை அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகளை எமது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

அபிவிருத்தி திட்ட உத்யோஸ்தர்களுக்கு இதுவரை காலமும் 300 ரூபா தான் போக்குவரத்து கொடுப்பனவாக வழங்கப்பட்டு வந்தது நாம் அதனை 1000 ரூபாவாக உயர்த்தி உள்ளோம் கொடுப்பனவுகள் படிப்படியாகவே உயர்த்தி கொடுக்கப்படும்.

பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் மக்களின் நலன்களையும் நாம் யோசிக்க வேண்டி உள்ளது. வெளிநாட்டு வருமானங்களை நாம் கவர்கின்ற விடயங்களையும், வருமானம் ஈட்டுகின்ற தொழில்களில் முதலீடுகளை செய்ய வேண்டியுள்ளது.

இவற்றையெல்லாம்  ஒன்றிணைக்கும்போதுதான் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும். வளைகுடா நாட்டில் இன்னும் யுத்த சூழ்நிலை காணப்படுகின்றது எரிபொருள் விலைவாசிகள் அனைத்து நாடுகளிலும் உயர்வடைந்து உள்ளது.

இருந்தாலும் எமது மக்கள் தாங்கக்கூடிய வாழ்க்கைச் செலவினை நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம். அரச நிதிகளை பயன்படுத்தி மானியங்களையும் வழங்கி வருகின்றோம். மக்கள் சமாளிக்கக்கூடிய விலைவாசிகளே நாம் தற்போது நிர்ணயத்துள்ளோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.