தென் கொரிய ஜனாதிபதிக்கு பயணத்தடை
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு எதிராக அந்த நாட்டு அதிகாரிகளினால் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியமை தொடர்பில் விசாரணையை எதிர்கொண்ட நிலையில், அவருக்கு இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி யூன் சுக் யோலினால் தென் கொரியாவில் கடந்தவாரம் அவசரமாக இராணுவச் சட்டம் பிரகடணப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, தென் கொரிய நாடாளுமன்றத்துக்கு வெளியே பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனாதிபதியைப் பதவி நீக்கம் செய்யுமாறு கோரி ஒன்றிணைந்தனர்.
அத்துடன், குறித்த இராணுவச் சட்டத்தினை அமுல்படுத்தவதற்கு எதிராக நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், அவரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணையொன்று எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டது.
இருப்பினும், ஆளும் கட்சி உறுப்பினர்களின் புறக்கணிப்பு காரணமாகக் குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு தோல்வியடைந்தது.
பகிரவும்...