Main Menu

தென்மராட்சி இலக்கிய அணியின் கம்பன் விழா!

தென்மராட்சி இலக்கிய அணி முன்னெடுக்கும் கம்பன் விழா சாவகச்சேரி சங்கத்தானை தமிழ்க்கோட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இன்று மாலை 4.30 மணியளவில் அருள்மிகு கந்தசாமி கோவிலிருந்து கம்பனின் திருவுருவப்பட ஊர்வலம் தமிழ் கோட்ட மண்டபத்தை வந்தடைந்தது.“கற்போர் மனதில் களிநடம் புரியும் கம்ப பாத்திரம்”பரதனே! , அனுமானே!, கும்பகர்ணனே! என்ற பட்டி மன்றமும் நடைபெற்றது . நிகழ்வில் பரதனே என இரா.செல்வவடிவேல், பரா.ரதீஸ் ஆகியோரும், அனுமனே என த.நாகேஸ்வரன், அ.வாசுதேவா ஆகியோரும், கும்பகர்ணனே என ந.விஜயசுந்தரம், சி.மார்க்கண்டு ஆகியோரும், விவாத அரங்கில் நீதிபதியாக கம்பவாரதி இ.ஜெயராஜ் கலந்துகொண்டார்.

வழக்காடு மன்றத்தில் ச.மார்க்கண்டு, ந.விஜயசுந்தரம், இ.செல்வவடிவேல், த.நாகேஸ்வரன் தமது விவாதங்களை முன்வைத்தனர்.

இன் நிகழ்வில் வைத்தியர் அருளானந்தம் அவர்களுக்கு மண்ணின் மைந்தன் எனும் கௌரவ பட்டமும் வழங்கி வைக்கப்பட்டது.

பகிரவும்...