Main Menu

தென்கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 6,767ஆக உயர்வு!

அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தென் கொரியாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 6,767ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 483பேர் கொரோனா வைரசால் இன்று (சனிக்கிழமை) புதிததாக பாதிக்கப்பட்டவர்களாக இனங்காணப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொவான் சென்டர்ஸ் ஃபார் நோய் மற்றும் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு (கே.சி.டி.சி) துணை இயக்குனர் குவான் ஜுன்-வூக் தெரிவித்தார்.

அத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44இல் இருந்து 46 ஆக உயர்ந்துள்ளதாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாத நடுப்பகுதியில ‘நோயாளி 31’ என்று அழைக்கப்படும் 61 வயதான பெண் ஒருவர் தென்கிழக்கில் உள்ள ஷின்சியோன்ஜி தேவாலயத்தின் ஒரு கிளையில் மத சேவைகளில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மொத்த பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஷின்சியோன்ஜி ரகசிய தேவாலயத்துடன் தொடர்புடையவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பகிரவும்...