Main Menu

துணை முதல்வருக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு நீக்கம் – மத்திய அரசு!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி  முக்கிய தலைவர்களுக்கு இசட் பிளஸ், இசட், எக்ஸ், வை ஆகிய பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர், துணை குடியரசுத்  தலை வர், பிரதமர், நீதிபதிகள், மத்திய அமைச்சர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

தவிர பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள தனி நபர்களுக்கும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு படை  கமாண்டோக்கள், டெல்லி பொலிஸார் அல்லது இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் பொலிஸ் படை வீரர்கள் பாதுகாப்புப்  பணிக்காக நியமிக்கப்படுவர்.

இதற்கிடையே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைக்குப் பின்னர் முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அளிக்கப்பட்டு வரும் இசட் பிரிவு பாதுகாப்பு நாளையில் இருந்து விலக்கிக்  கொள்ளப்படுவதாக தமிழக அரசுக்கு சி.ஆர்.பி.எப். கடிதம் எழுதியுள்ளது.

மத்திய அரசின் பாதுகாப்புப் பட்டியலில் இருந்து துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் பெயர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஓ.பன்னீர் செல்வத்துக்கு தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் வி.ஐ.பி.க்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக மத்திய – மாநில அரசுகளின் முடிவுகளின்படி, நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களுக்கான பாதுகாப்பு படிநிலைகளை குறைப்பது, அதிகரிப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளிட்டவையை கருத்தில்  கொண்டு பாதுகாப்பு படி நிலைகள், குறைப்பது அல்லது கூட்டுவது தொடர்பாக உள்துறை அமைச்சகம் இத்தகைய முடிவுகளை எடுத்து வருகிறது.

பகிரவும்...