Main Menu

திருமண வாழ்த்து- கேசவன் & நிவேதா (26/05/2024)

பிரான்ஸ் Villepinte இல் வசிக்கும் தியாகராஜா-வாணி தம்பதிகளின் செல்வப் புதல்வன் கேசவன் அவர்களும் பிரான்ஸ் Bondy இல் வசிக்கும் பத்மநாதன் பாலரமணி தம்பதிகளின் செல்வப்புதல்வி நிவேதா அவர்களும் 25ம் திகதி மே மாதம் சனிக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள்.

நேற்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட கேசவன் &நிவேதா தம்பதிகளை அன்பு அப்பா, அம்மா, மாமா, மாமி மச்சான்மார், மச்சாள்மார், அண்ணாமார், அண்ணிமார், அக்காமார், அத்தான்மார், தம்பிமார், தங்கைமார், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் இன்று போல் என்றும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றோம்.

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட கேசவன்&நிவேதா தம்பதிகளை TRT தமிழ் ஒலி குடும்பமும் ஆல்போல் தளைத்து அறுகுபோல் வேரூன்றி 16 செல்வங்களும் பெற்று பார் போற்ற பெரு வாழ்வு வாழ வாழ்த்துகின்றோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் நிவேதாவின் அன்பு அப்பா VP என்று அழைக்கப்படும் பத்மநாதன் அவர்கள்.

அவருக்கும் எமது நன்றி.

பத்மநாதன் அவர்கள் இன்று 65வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார் .V P யை வாழ்த்துவோர் அன்பு மனைவி பிள்ளைகள் கார்த்திகா நிவேதா கீதா அன்பு மருமகன்மார் நவின், கேசவன், மற்றும் அம்மா, தங்கை, அண்ணாமார் , தம்பிமார், மச்சான்மார், மச்சாள்மார், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

பகிரவும்...
0Shares