Main Menu

தினசரி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது! பெருமூச்சு விடும் ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பாவில் ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால், தினசரி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த மாத ஆரம்பத்தில் அதிக மனித அழிவுகளை சந்தித்துவந்த குறித்த மூன்று நாடுகளுக்கு நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) சற்று ஆறுதல் அளிக்கும் நாளாக அமைந்துள்ளது.

இதனை மெய்ப்பிக்கும் வகையில் நேற்றைய நிலவர தரவுகளை பார்க்கலாம்.

ஸ்பெயினில் கடந்த 24 மணித்தியாலங்களில் 164பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,264ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல புதிதாக 1,533பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 247,122பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸை பொறுத்தவரை கடந்த 24 மணித்தியாலங்களில் 135பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,895ஆக அதிகரித்துள்ளது.

மேலும், புதிதாக 297பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 168,693பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியை பொறுத்தவரை கடந்த 24 மணித்தியாலங்களில் 174பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,884ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, புதிததாக 1389பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 210,717ஆக உயர்வடைந்துள்ளது.

பகிரவும்...