Main Menu

நாம் எனப்படும் அணி சேரா நாடுகளின் மாநாடு இன்று

நாம் எனப்படும் அணி சேரா நாடுகளின் மாநாடு இன்று நடைபெறவுள்ளது.

காணொளி தொழிநுட்பம் ஊடாக இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார்.

நாம் எனப்படும் அணி சேரா நாடுகள் அமைப்பு ஐ.நா. போன்று மிகப்பெரிய அமைப்பாகும்.

இதில் ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த 120 வளர்ந்து வரும் நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்தநிலையில் இணையத்தளம் ஊடாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்கு அஜர்பைசான் ஜனாதிபதி இல்ஹாம் அலிவேவ் தலைமை தாங்குகிறார்.

உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் இன்று நடைபெறவுள்ள மாநாட்டின் போது கொரோனா வைரசிற்கு எதிராக இந்தியா தொடுத்து வரும் போர்,

நாம் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள ஒருங்கிணைப்புக்கான அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், ‘கொவிட் -19 எதிராக ஒன்றிணைத்தல்’ என்ற இயக்கத்தின் அரசியல் பிரகடனம் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

பகிரவும்...