Main Menu

தாய்லாந்தில் கோர விபத்து: 17 பேர் உயிரிழப்பு,பலர் படுகாயம்!

தாய்லாந்தில் ரயிலுடன் பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் மரணித்துள்ளதுடன் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிலிருந்து சா சோயெங் சாவோ மாகாணத்தில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்தே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தக் கோரா விபத்தினைத் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் இடம்பெற்றுவருவதுடன் படுகாயமடைந்தவரகளில் பலர் உயிருக்குப் போராடிவ்ரு்ம நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக மாகாண ஆளுநர் மைட்ரீ ரிதிலனண்ட் (Maitree Tritilanond ) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறான கோர விபத்துக்கள் தாய்லாந்தில் பொதுவானவை எனவும் இது உலகின் மிக ஆபத்தான சாலைகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் 2018ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, தாய்லாந்து உலகில் இரண்டாவது இடத்தில் அதிக போக்குவரத்து இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...