Main Menu

இலங்கையில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி!

இலங்கையில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 14 ​பேருக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 25 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மினுவங்கொடை கொத்தணியில் இதுவரையில் ஆயிரத்து 346 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 791 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 10 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 3 ஆயிரத்து 317 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் தொற்று உறுதியான ஆயிரத்து 461 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளைஇ இந்த வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...